மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யுங்கள்! - சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி போலீசில் புகார்
Recommended Video

சென்னை: சசிகுமாரின் மேனேஜர் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான பைனான்சியர் - தயாரிப்பாளர் மதுரை அன்புச் செழியனைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளனர் இயக்குநர்கள் சசிகுமார், அமீர் மற்றும் சமுத்திரக் கனி ஆகியோர்.
40 வயதான அசோக்குமார் இன்று அபிராமபுரத்தில் உள்ள தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரையுலகில் அவரை பெரும்பாலானோருக்கு நன்கு தெரியும் என்பதால், அசோக்கின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
சசிக்குமாரின் அத்தை மகன்தான் அசோக் குமார். சசிக்குமாருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். கந்து வட்டிக்கு அவர் தற்கொலை செய்திருப்பது திரையுலகை உலுக்கியுள்ளது.

மதுரை அன்பு
தனது தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணம் என்று பைனான்சியர் மதுரை அன்புச் செழியனைக் குறிப்பிட்டுள்ளார். அவரது சித்திரவதை தாங்காமல்தான், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார் தனது கடிதத்தில்.

போலீஸில் புகார்
இதைத் தொடர்ந்து அன்புச் செழியனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று இயக்குநர்கள் சசிகுமார், அமீர், சமுத்திரக் கனி உள்ளிட்டோர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சசிக்குமார் நிறுவன மேனேஜர்
தற்கொலை செய்து கொண்ட மேனேஜர் அசோக்குமார், கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் மற்றும் இணை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியில் திரையுலகம்
அசோக்குமாரின் மரணத்தை தமிழ்த் திரையுலகம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை. மேலும் அன்புச் செழியன் மீது புகார்கள் வருவது முதல் முறையல்ல என்பதால் இந்தமுறையாக உறுதியான நடவடிக்கையில் அது இறங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications