For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் சிக்கல்... பெயரைமுடக்க தேர்தல் ஆணையத்திடம் புகார்!

சின்னத்தைத் தொடர்ந்து கமலின் கட்சியின் பெயருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    சின்னத்தை தொடர்ந்து கமல் கட்சியின் பெயருக்கும் பிரச்சனை- வீடியோ

    சென்னை : கமல் கட்சியின் சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது கட்சியின் பெயர் நீதிமன்றத்தின் மாண்பையே கெடுக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு ஏழை,எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ள விஷயங்களின் விவரம் பின்வருமாறு :

    நடிகர் கமல் தொடங்கியுள்ள புது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்ற அங்கீகாரமுள்ள மக்கள் நீதிமன்றத்தை அணுகும் பொதுமக்களை திசை திருப்பும் வகையிலும் குழப்பும் வகையிலும் மக்கள் நீதி மய்யம் என நடிகர் கமல் தன் கட்சிக்கு பெயரிட்டுள்ளார்.

    குழப்பும் கமல்

    குழப்பும் கமல்

    எந்த ஒரு சட்ட வலிமையும் இல்லாத தன் கட்சியை மக்கள் நீதி மன்றத்திற்கு இணையான பெயர் சூட்டி மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்த நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். இது சாதாரண மக்களிடையே குழுப்பத்தை ஏற்படுத்தி கமல் கட்சியின் நீதி மய்யம் என்ற பெயரில் கட்ட பஞ்சாயது செய்யவே உதவும்.

    நீதிமன்ற மாண்பிற்கு எதிராக

    நீதிமன்ற மாண்பிற்கு எதிராக

    ஆகவே ஏமாற்றும் வகையிலும் மக்கள் நீதிமன்ற மண்பை சிதைக்கும் வகையிலும், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல் கட்சி செயல்பட தடை விதிக்க வேண்டும். அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

    அவதூறாக பேசிய கமல்

    அவதூறாக பேசிய கமல்

    அதோடு கட்சி துவக்க விழாவில் பேசிய கமல் தமிழக மக்களை 600 ரூபாய்க்கு வாக்குகளை விற்றவர்கள் என்றும் திருடர்கள் என்றும் கொச்சைப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். ஆகவே மக்கள் நல மய்யம் கட்சியை தடை செய்வதோடு கமல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கட்சி பெயருக்கு சிக்கல்

    கட்சி பெயருக்கு சிக்கல்

    நடிகர் கமலின் கட்சியில் உள்ள சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நீதிமன்ற மாண்பை குறைக்கும் வகையில் கட்சியின் பெயர் இருப்பதாக குற்றம்சாட்டி அதற்கு தடை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Complaint given against Kamalhaasan's party name to election comission which is disrespecting courts responsibility and also seeks ban for his party name and take criminal action against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X