தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் எச்பிசிஎல் நிறுவனங்களின் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதுபற்றி விசாரித்தபோது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஈரானுக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் தினமும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கச்சா எண்ணெய், கேஸ்களுக்கான 20 சதவீத வர்த்தகம் நடக்கும். தற்போது இந்த வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Petrol and Diesel Shortage

இதனால் நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் நம் நாட்டின் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல், டீசல் உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதும் ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவி வருவதால் பெட்ரோல் - டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு தலை விரித்தாட தொடங்கி உள்ளது. எச்பிசிஎல் நிறுவனங்களின் பெட்ரோல் - டீசல் இல்லாத நிலை உள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பெட்ரோல் - டீசல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அருகே உள்ள எச்பிசிஎல் பங்க் உள்பட பல பெட்ரோல், டீசல் நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

இதுபற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ''ஈரான் போர் காரணமாக கடந்த 15 நாட்களாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளது. எங்களுக்கு கிரெடிட் லோட் கொடுத்தார்கள். ஆனால் இப்போது கிரெடிட் லோட் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். நாங்கள் பணம் கொடுத்து தான் பெட்ரோல், டீசல் வாங்க வேண்டி உள்ளது. உதாரணமாக எனக்கு நாளைய தினத்துக்கு 4 ஆயிரம் லிட்டர் பெட்ரோல், 4 ஆயிரம் லிட்டர் டீசல் வேண்டும் என்றால் முந்தைய நாளே அதற்கான பணத்தை கொடுத்து விட வேண்டும்.

நாங்கள் திருச்சி டிவிஷனில் வருகிறோம். எங்களுக்கு தர்மபுரி எச்பிசிஎல்-லில் இருந்து சப்ளை வருகிறது. ஆனால் தற்போது சப்ளை சரியாக கிடைப்பது இல்லை. கடந்த 15 நாட்களாக அதிகப்படியான எச்பிசிஎல் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லாத நிலை தான் இருக்கிறது. காரணம் என்னவென்று கேட்டால் அவர்களுக்கே பெட்ரோல், டீசல் வரவில்லை என்கின்றனர். எனக்கு 2 டேங்கர் லாரி இருக்கிறது. அங்கு வண்டியை அனுப்பினால் 2 நாட்கள் கழித்து தான் பொருட்கள் கிடைக்கிறது.

தற்போது கள்ளக்குறிச்சி பகுதியில் எச்பிசிஎல் பங்க்குகளில் பெட்ரோல், டீசல் இல்லாத நிலை உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில் 4 நாட்கள் வரை பொருட்கள் கொடுக்காமல் உள்ளனர். பெட்ரோல் இன்று இல்லை என்று கூறிவிட்டனர். இன்று காலையில் பெட்ரோல், டீசல் இல்லை என்பதால் ஒரு தரப்பினர் எங்களிடம் சண்டைக்கு வந்துவிட்டனர். இதனால் தான் பெட்ரோல், டீசல் இல்லை என்று அறிவிப்பு வைத்து வாகனங்கள் உள்ளே வராத வகையில் கயிறு உள்ளது. நேற்று கலெக்டர் அலுவலக வாகனங்களுக்கு கூட எங்களால் பெட்ரோல், டீசல் இல்லை என்று கூறிவிட்டோம்.

எனக்கு 2 பங்க்குகள் உள்ளன. 2 பங்க்குகளிலும் பெட்ரோல், டீசல் இல்லை. இன்னும் 10 முதல் 15 நாட்களில் நிலைமை சரியாகவிடும் என்று கூறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு வண்டிக்கு 250 லிட்டருக்கு மேல் கொடுக்ககூடாது. மீறினால் மும்பையில் இருந்தே எங்களின் ஆட்டோ மெஷினை லாக் செய்துவிடுவார்கள். ஐஓசிஎல், பிபிசிஎல் நிறுவனங்களில் ஓரளவு மேனேஜ் செய்கிறார்கள். அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. எச்பிசிஎல் அதிகாரிகள் சரி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அது எப்படி என்று தெரியவில்லை. இது எங்களுக்கு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கடன் வாங்கி '' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+