சென்னையில் ஆந்திரா வங்கி மீது பெட்ரோல் குண்டுவீச்சு
சென்னை: சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள ஆந்திரா வங்கி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் அம்மாநில போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் ஆந்திர பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னை டி.பி. சத்திரத்தில் உள்ள ஆந்திரா வங்கி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வங்கியின் முன் பக்கம் சேதம் அடைந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆந்திரா என்கவுன்ட்டர் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் வியாழக்கிழமை வலியுறுத்தினர்.
அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
ஆந்திரா அரசு கேட்டுக் கொண்டால் தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும். ஆந்திரா அரசு கோரிக்கை விடுக்காததால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications