அரவக்குறிச்சியில் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
கரூர்: கரூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிமனை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமியும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் இந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் அரவக்குறிச்சியில் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் செந்தில் பாலாஜியின் தேர்தல் பணிமனை மீது நேற்று இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி பேரூராட்சி தலைவரும், அதிமுக நிர்வாகியுமான சையத் இப்ராஹிம் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications