இன்றைக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.65.51, டீசல் லிட் ரூ.56.29

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு ஜூலை 3ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.51, டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.29 காசுகள் என நிர்ணயிக்ப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. 1 மற்றும் 15ஆம் தேதிகளில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

Petrol / diesel Price in Chennai on July 3rd,2017

தங்கம் விலை போல நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. கடந்த 15 நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்றம் இறக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது.

இதற்காக நாள்தோறும் பெட்ரோல், டீசலின் தினசரி விலையை அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. fuel@ioc என்ற செயலியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜூலை 3ஆம்தேதியான இன்றைய பெட்ரோல்,டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெட்ரோல் நேற்றைய விலை விட 7 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.65.51 காசுகள் என்றும், டீசல் விலையில் நேற்றைய விலை விட 12 பைசா உயர்ந்து ரூ.56.29 காசுகளாக நிர்ணயித்துள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Current Petrol / diesel Price in Chennai. Get the Latest Chennai Petrol / diesel price. Also find historical Petrol prices in Chennai.
Please Wait while comments are loading...