சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலை என்ன தெரியுமா மக்களே?
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் நிறுவனமே தினந்தோறும் நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அது முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

இந்த விலை நிர்ணயம் அமலுக்கு வந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாயாகவும் டீசலின் விலை 57 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாகவே ரூபாயின் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்தித்தன. நேற்று நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 49 காசுகள் என விற்பனை ஆனது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 36 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.84.85 ஆகவும், டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.74 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டுள்ளனர். மேலும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துவிடுமோ என அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications