தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை கம்மி.. அதென்ன எடப்பாடியாரே இப்படி சொல்லிட்டீங்க!
தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விகிதத்தை தமிழக அரசு அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும் டீசல் மீதான வாட் வரி 21.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தியது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.78 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 1.70 ஆகவும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டர் ரூ74.47 ஆகவும் டீசல் விலை லிட்டர் ரூ.63.96 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக அரசின் இந்த விலை உயர்வு அறிவிப்பிற்கு பொதுமக்களிடம் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உயர்த்தப்பட்ட வாட் வரியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரி விதிப்பை திருப்பப் பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது என்று பழனிசாமி கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் தமிழக மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications