பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு; சென்னையில் விலை எவ்ளோ தெரியுமா?
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.13 ரூபாயும், டீசல் 2.71 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69 ரூபாய் 45 காசாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 55 ரூபாய் 74 காசாக அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, பெட்ரோல் விலை 10 முறையும், அக்டோபர் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் 17ரூபாய்.11பைசாவும் டீசல் விலை மொத்தம் 12ரூபாய் 96 பைசாவும் குறைந்தது.
விலை உயர்வு
பிப்ரவரி 16ஆம் தேதியும், மார்ச் 1ஆம்தேதியும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பிறகு, ஏப்ரல் 2 மற்றும் 16ஆம்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்96பைசா (உள்ளூர் வரிகளை சேர்க்காமல்) உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 பைசா அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் உயர்வு
‘இந்த நிலையில் 15 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 13 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 2ரூபாய்71 பைசவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் விலை எவ்வளவு
உள்ளூர் வரியையும் சேர்த்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 37 காசு அதிகரித்தது. இதனால் 66 ரூபாய் 8 காசாக இருந்த பெட்ரோல் விலை 69 ரூபாய் 45 காசாக உயர்ந்தது. இதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 98 காசு உயர்ந்தது. இதனால் 52 ரூபாய் 76 காசாக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலை 55 ரூபாய் 74 காசாக அதிகரித்தது.
டெல்லி விலை உயர்வு
பெட்ரோல் விலை 63 ரூபாய் 16 பைசாவிலிருந்து 66 ரூபாய் 29 பைசாவாக ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை49 ரூபாய்71 பைசாவிலிருந்து 52ரூபாய் 28 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது
கொல்கத்தா.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70 ரூபாய் 44 பைவிலிருந்து 73 ரூபாய்76 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 54 ரூபாய் 17 பைசாவிலிருந்து 56 ரூபாய் 85 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 ரூபாய் 84 பைசாவிலிருந்து அதிகரித்து ரூ.74 ரூபாய் 23 பைசாவாக அதிகரித்துள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு 56 ரூபாய் 87 பைசாவிலிருந்து அதிகரித்து 59 ரூபாய் 86 பைசாவாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications