”பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது”
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொழுதே பெட்ரோல் விலை மார்ச் மாத கடைசியில் குறையும் என்று எதிர்பார்க்கப் பட்டது.அதன் படி இன்று முதல் பெட்ரோல் விலை குறைகின்றது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் குறைகிறது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 75 ரூபாய் 49 காசுகளாக இருக்கும். பெட்ரோல் விலை கடந்த மார்ச் 1ம் தேதி 60 காசுகள் உயர்ந்தது.
டெல்லியில் 90 காசுகள் குறைந்து 72.26 ரூபாய்க்கு விற்கப்படும். டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications