பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13, டீசல் ரூ.2.71 விலை உயர்வு.. இன்று நள்ளிரவு முதல்!
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.13 ரூபாயும், டீசல் 2.71 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, பெட்ரோல் விலை 10 முறையும், அக்டோபர் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் 17ரூபாய்.11பைசாவும் டீசல் விலை மொத்தம் 12ரூபாய் 96 பைசாவும் குறைந்தது.
விலை உயர்வு
பிப்ரவரி 16ஆம் தேதியும், மார்ச் 1ஆம்தேதியும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பிறகு, ஏப்ரல் 2 மற்றும் 16ஆம்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்96பைசா (உள்ளூர் வரிகளை சேர்க்காமல்) உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 பைசா அதிகரிக்கப்பட்டது.
மீண்டும் உயர்வு
இந்த நிலையில் 15 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 13 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 2ரூபாய்71 பைசவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கண்டனம்
டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. விலை உயர்வு திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications