இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை என்ன?... பெட்ரோல் விலை மட்டும் உயர்வு
இன்றைய தினம் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. எனினும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லை.
சென்னை: இன்றைய தினம் பெட்ரோல் விலையில் 08 காசுகள் உயர்ந்துள்ளது. எனினும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்று வரை பெட்ரோல் டீசல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர். சென்னையில் இன்று பெட்ரோலின் விலை 08 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 75.88 ஆகவும், டீசலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.67.57 காசுகளாக உள்ளது.
பிராண்டட் மற்றும் பிராண்டட் அல்லாத பெட்ரோல் மற்றும் டீசலின் கலால் வரியை குறைத்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி கடந்த 1-ஆம் தேதி பட்ஜெட்டில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications