பேட்ட இரண்டாவது லுக் போட்டோவில் ரஜினிகாந்த்தை பார்த்தால் யாரை மாதிரி இருக்குது தெரியுதா?
Recommended Video

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் பேட்ட. முன்னணி நடிகர், ரஜினிகாந்த் இதில் ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரம் ஏந்தியுள்ளார்.
இதனிடையே பேட்ட திரைப்படத்தின் இரண்டாவது லுக் என்ற பெயரில் ரஜினிகாந்த் புகைப்படம் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
முறுக்கு மீசையுடன் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற ஒரு போட்டோ அது.

வடிவேலு பாணி
எந்த லுக்கை விட்டாலும் ரஜினி ரசிகர்களுக்கு அது மாஸ் என்றுதான் தெரியும். அது அவர்கள் ரசனை. அதேபோலத்தான், இந்த லுக்கையும் புகழ்ந்து வருகிறார்கள். ஆனால், பொது ரசிகர்களோ, கோவில் படத்தில் வடிவேலு செட் செய்து உடம்பை கட்டுமஸ்தாக்கி கட்அவுட் வைப்பாரே அது போல இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள்.

நல்ல உழைப்பு
இதற்கு காரணம், இரண்டாவுத லுக்கில் வெளியாகியுள்ள ரஜினிகாந்த் படத்தை உற்று பார்த்தாலே தெரியும். அவரது கழுத்து பகுதி கூட எப்படி பாலீஷ் செய்யப்பட்டு கிராபிக்ஸ் மூலம் மெருகேற்றப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.
— Sonia Arunkumar (@rajakumaari) October 4, 2018 |
கே.சி.பழனிச்சாமி
இன்னொரு விஷயம் என்னவென்றால், ரஜினியின் லுக், அப்படியே அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி போல இருப்பதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள். கே.சி.பழனிச்சாமி இப்போது தினகரன் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இன்ஸ்பையர் ஆகிதான் இந்த லுக் வந்திருக்குமோ என்கிறார்கள்.

திறமைதான்
இன்னும் சிலரோ பல கோடி செலவு செய்து எடுக்கும் எந்திரன் 2வது பாகத்தில் கூட ரஜினியை பார்க்க வயதானவர் மாதிரி தெரிகிறது. ஆனால் கார்த்திக் சுப்புராஜின் திறமையோ திறமை. கம்மி அமவுண்டில் கிராபிக்ஸ் பக்கா என்கிறார்கள். எது எப்படியோ, உங்கள் பார்வைக்கு இந்த லுக் எப்படி தெரிகிறதோ அதை பொறுத்து கருத்துக்களும் மாறும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications