போயஸ் தோட்டத்தில் தாக்கப்பட்டு காயமடைந்தார் ஜெ.. பி.எச். பாண்டியன் பகீர்!
போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் காயமான நிலையிலேயே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சென்னை : ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக இன்று பரபரப்பு புகார் ஒன்றினை பி.ஹெச். பாண்டியன் கூறியுள்ளார். ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் கீழே தள்ளி விட்டனர் என்றும் அவர் காயமடைந்த நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்த போது நடந்தது என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

தள்ளி விட்டார்கள்
செப்டம்பர் 22ஆம் தேதியன்று இரவு போயஸ் தோட்ட இல்லத்தில் அவரை கீழே தள்ளிவிட்டார்கள் என்று காயமடைந்த நிலையிலேயே அவர் அப்பல்லோவிற்கு கொண்டு வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

சிசிக்சை நிறுத்தம்
போயஸ்தோட்ட இல்லத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளையும், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளையும் வெளியிட வேண்டும் என்று தெரிவித்தார். உயிர் போகும் தருவாயில் அவரது சிகிச்சையை நிறுத்த சொன்னது யார் என்றும் பி.ஹெச். பாண்டியன் கேள்வி எழுப்பினார். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் நிறுத்தச் சொன்னார்களா என்றும் பி.எச் பாண்டியன் கேட்டார்.

தடுத்தது யார்?
2015ல் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர் ஆனால் அதை சிலர் தடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணமடைந்து 3 மாதங்கள் கடந்த நிலையில் அவரது சிகிச்சை மற்றும் மரணம் பற்றி பல்வேறு சந்தேகங்களை பி.ஹெச். பாண்டியன் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதி விசாரணை தேவை
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விரிவாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பி.ஹெச் பாண்டியன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications