சென்னை மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை நிர்வாணமாக்கி சில்மிஷம் செய்த ஊழியர்
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க வந்த வெளிநாட்டு பெண்ணை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கி அவரிடம் சில்மிஷம் செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் எம்.ஆர்.சி. நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு திருவான்மியூரில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டு இளம்பெண் கடந்த புதன்கிழமை வந்துள்ளார். சிகிச்சை பெற வந்த அவருக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பெண் எக்ஸ்ரே பிரிவுக்கு சென்றுள்ளார்.
அங்கு பணியில் இருந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திகேயன்(37) அந்த பெண்ணிடம் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றால் தான் எக்ஸ்ரே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்றார். அதன் பிறகு கார்த்திகேயன் எக்ஸ்ரே எடுக்கிறேன் என்ற பெயரில் அவரை கண்ட இடத்தில் தொட்டு சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நேராக மைலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அவரின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications