10 வயது சிறுமி பலாத்கார விவகாரம்: சிபிசிஐடி விசாரிக்க கோரி மனு: அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கார் நகர் ஓம் சக்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. இவரது 10 வயது மகள் சுமதி கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவளை கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மர்ம நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்களும், பொதுமக்களும் கடந்த இரண்டு நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இந்த நிலையில் சிறுமிக்கு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்க வலியுறுத்தி சென்னை பெரம்பூரை சேர்ந்த நதீஷாபானு என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
சோழவரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. ஆட்டோ டிரைவர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவரது 10 வயது குழந்தையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும்,
அந்த குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வருவதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. கடந்த 15ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை. வழக்கு பதிவு செய்து சரியாக விசாரிக்க வேண்டும்.
ஆனால், சோழவரம் போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று விசாரித்து, ‘‘தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி, திருவள்ளூர் எஸ்பி உள்பட 5 பேர் நாளை பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். அதோடு வழக்கு விசாரணையை, இம்மாதம், 20ம் தேதிக்கு, நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications