For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு!

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

மதுரை: தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். அவர் தமது மனுவில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளார்.

PIL seeks to stay for 18 MLAs disqualification

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

அத்துடன் 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதேபோல் மறு உத்தரவு வரும் வரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை நீடிக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

English summary
A PIL filed in Madurai bench of Madras High court seeking stay for 18 MLA's disqualification by TamilNadu Assembly Speaker Dhanapal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X