அண்ணாவுக்கு வலது புறத்தில் கருணாநிதி... மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்!
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு, அண்ணா சமாதியின் வலதுபுறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்வதற்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கோரப்பட்டது.

ஆனால், இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது. அதையடுத்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா சமாதிக்கு அருகிலேயே கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.
அதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனும் இந்த ஆய்வில் பங்கேற்றார்.
அதில் அண்ணா சமாதிக்கு வலதுபுறம் உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து இந்தப் பகுதி, அதிரடிப் படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதையடுத்து உடலடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications