கோவையில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து... பல லட்சம் மதிப்பு பொருட்கள் உருகின!
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் : கோவை அருகே குனியமுத்தூர் பகுதியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
குனியமுத்தூர் ஜெ.ஜெ நகர்ப் பகுதியில் இருக்கக் கூடிய பிளாஸ்டிக் மற்றும் மரச்சாமான்கள் சேமிப்பு கிடங்கில் இன்று மாலையில் திடீரனெ தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குமார் ஒன்றரை மணி நேரமாக பற்றி எரிந்த தீயால் குடோனின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன.

குடோனுக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மரச்சாமான்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளன. முற்றிலும் தீயில் கருகிய பிளாஸ்டிக் சாமான்களால் அந்தப் பகுதியில் பிளாஸ்டிக் நெடி வீசுவதோடு, கரும்புகை மண்டலமும் சூழ்ந்துள்ளது.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை, தீ அணைக்கப்பட்டாலும், மரச்சாமான்களுக்கு நடுவே அனல் கனிந்து கொண்டு இருப்பதால் தொடர்ந்து அந்த இடத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்து வருகின்றனர்.
பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர் சாமான்கள், பேப்பர்கள் என பழைய பொருட்கள் இந்த குடோனில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் இந்த பொருட்கள் மறுசுழற்சிக்காக எடுத்து செல்லப்படுகின்றன. தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications