வைரவிழா கொண்டாட்டம்: கருணாநிதி தவிர அனைவரும் பங்கேற்கிறார்கள்!
ஜூன் 3ஆம் தேதி மாலை திமுக தலைவருக்கு வைர விழா நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜூன் 3ஆம் தேதி மாலை திமுக தலைவருக்கு வைர விழா நடத்தப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் எம்எல்ஏவாக அடி எடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை வைரவிழாவாக கொண்டாட அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளுடன் சேர்த்து வைரவிழாவை கொண்டாட முடிவு செய்த அக்கட்சியினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

ஜூன் 3ல் வைரவிழா
இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சென்னையில் என்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஜூன் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வைரவிழா நடைபெறும் என தெரிவித்தார்.

ராகுல் பங்கேற்பு
இதில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்பார்கள் என அவர் கூறினார். இதேபோல் பீகார் முதல்வர் நிதீஷ்குமார், புதுவை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார்.

லாலுவும் வருகிறார்
லாலுபிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோரும் கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்பார்கள் என அவர் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோரும் கலந்துகொள்வார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதி பங்கேற்க வாய்ப்பு குடிறவு
கருணாநிதி நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், தற்போதைய சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு என்றார். மருத்துவர்கள் அனுமதித்தால் கருணாநிதி பங்கேற்பார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications