பசிக்கு உணவும், புற்றுநோயாளி குழந்தைகளுக்கு ரத்தமும் தேவை.. உதவி செய்ய முடியுமா?
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் ட்விட்டரில் உதவி கேட்டு நிற்கிறார்கள். உதவும் நிலையில் உள்ளவர்கள் தயவு செய்து உதவிக்கரம் நீட்டுங்களேன்.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் ஓடியோடி நிவாரணப் பொருட்கள் அளித்து வந்தாலும் இன்னும் பலர் நாள் கணக்கில் பசியாலும், தாகத்தாலும் துடிக்கிறார்கள்.
அவ்வாறு தவிப்பவர்களுக்கு உதவி செய்யக் கோரி ட்விட்டரில் பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
|
தண்ணீர்
#Verified:ரயில் நகர், பாடி குப்பம் ரோடு, கோயம்பேட்டில் 250 பேருக்கு தண்ணீர், பால் தேவை. தொடர்புக்கு மீனாட்சி- 7358385777.#ChennaiMicro யாராவது அங்கு செல்ல முடியுமா?
|
உணவு
#Verified சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே 2 ஆயிரம் பேருக்கு உணவு தேவை. தயார் என்றால் வந்து எடுத்துச் செல்கிறோம். உடனே தொடர்பு கொள்ளவும்-
9940652412
|
பன்
உங்கள் பகுதியில் உள்ள ஏதாவது பேக்கரி திறந்துள்ளதா? உடனே 50 பன்கள், பட்டர், ஜாம் பாக்கெட்டுகளை வாங்கி வந்து தரவும். அவசர தேவை.
|
ரத்தம்
#ChennaiFloods எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் புற்றுநோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. 30 நிமிடங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது? யாராவது????
Those who can help the people of flood affected Chennai are requested to do so.
|
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
கொட்டிவாக்கத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு தேவை. தொடர்புக்கு 9962150976 @dhanushkraja @selvaraghavan @_ShwetaMohan_ @ash_r_dhanush












Click it and Unblock the Notifications