குடும்பத் தலைவனை குடிகாரனாக்கி சாகடித்துவிட்டு இலவசங்களால் ஏன் வாய்க்கரிசி போடுறீங்க?: சிவகுமார்
சென்னை: குடும்பத் தலைவனை குடிகாரனாக்கி அவன் ஈரலை பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசம் என்ற பெயரில் ஏன் வாய்க்கரிசி போடுகிறீங்க? என நடிகர் சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் நேற்று நடந்து முடிந்தது. நடிகர் சிவகுமார், தனது மகன் கார்த்தி மற்றும் குடும்பத்தாருடன் வந்து தி.நகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மதுவிலக்கு
இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளுமே மது விலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளன. யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியாது. ஐயா, கையெடுத்து கும்பிடுகிறேன், யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள்.

குடிகாரர்கள்
தமிழகத்தில் இந்த 40 ஆண்டுகளில் 1 கோடி பேரை குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளிகளாக உள்ளனர். குடும்பத் தலைவனை குடிகாரனாக்கி அவன் ஈரலை பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசம் என்ற பெயரில் ஏன் வாய்க்கரிசி போடுகிறீங்க?

பலாத்காரம்
பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்காரம்னு சொல்கிறீர்கள். அதற்கு அடிப்படை காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும், தொடை நடுங்கியாக இருந்தாலும் ஒரு 400 மில்லி அடிச்சான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, அக்கா, மனைவி, மகள் என வித்தியாசம் தெரியாது.

ஒடுக்கப்பட்ட இனம்
எந்த ஒடுக்கப்பட்டவர்களை காப்பாற்ற பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த ஒடுக்கப்பட்ட, மிதிக்கப்பட்ட இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பில் கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன் முதலில் மதுவிலக்கை அமல்படுத்துங்கள். உடனடியாக முடியாவிட்டாலும் படிப்படியாக செய்யுங்கள் என்று கெஞ்சிக் கேட்கிறேன்.

நீர்
நம்மிடம் எல்லாம் நிறைய விவசாய நிலம் இருக்கிறது. ஆனால் நீர் ஆதாரம் இல்லை. வடநாட்டில் என்ன நடக்கிறது, பேய்த்தனமாக மழை பெய்து ஊர் எல்லாம் அடித்துக் கொண்டு செல்கிறது. கங்கையையும், காவிரியையும் இணைக்க வேண்டும் என சொல்லிப் பார்த்து அது நடப்பதாக தெரியவில்லை.

தூர் வாருதல்
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஐந்தே மாதங்களில் ரூ.1,300 கோடியில் கோதாவரியையும், கங்கையையும் இணைத்து ராயலசீமா, கிருஷ்ணா நதி டெல்டா பகுதியில் 17 லட்சம் ஏக்கர் விவசாயம் செய்ய வழிவகை செய்துள்ளார். தமிழகத்தில் அதை எல்லாம் செய்யாவிட்டாலும் ஆறு, ஏரி, குளங்களை தயவு செய்து தூர் வாருங்கள்.
மரம் நடுவோம்
வளமான நாடு என்பதற்கு 30 சதவீதம் காடு இருக்க வேண்டும். நாம் வீடு, வாசல் கட்டுகிறேன் என்ற பெயரில் சுமார் 10 கோடி மரங்களை வெட்டியுள்ளோம். 1 கோடி மரத்தை நட்டுள்ளோம். வீட்டிற்கு நான்கு மரத்தை நட்டால் தான் உங்களின் பேரன், பேத்தி காலத்தில் நாடு குளிர்ச்சியாக இருக்கும். வீட்டிற்கு நான்கு மரத்தை நட்டு வளர்ப்பது தான் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் நல்ல காரியம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications