ஒரு வாரத்தில் பிளஸ் டூ பாடத்திட்ட மாற்ற அறிவிப்பு? செங்கோட்டையன் சூசகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகமாக தெரிவித்தார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று அவர் பேட்டி அளித்தார். பத்து வருடங்களாக பிளஸ் டூவில் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளதே என்ற நிருபர்களின் கேள்விக்கு, "அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு வார காலத்தில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவோம். எல்லாவற்றையும் ஆய்வு செய்துவிட்டோம். நல்ல முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடுவோம்" என்றார்.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், அரசு பாடத்திட்டம் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்விதமாக இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்த நிருபரின் கேள்விக்கு, எல்லாவற்றையும் ஆராய்ந்து உரிய வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்றார் செங்கோட்டையன்.












Click it and Unblock the Notifications