பிளஸ் 2: எந்த பாடத்தில் எத்தனை சதவீதம் பேர் தேர்ச்சி.. இதோ முடிவுகள்!
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதத்துக்கு மேல் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Recommended Video

சென்னை பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் அனைத்து பாடங்களிலும் 90 சதவீதத்துக்கு மேல் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் 94.1%, மாணவர்கள் 87.7% தேர்ச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு விகிதத்தில் 97.05 சதவீதம் பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83. 35% தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளது.

இயற்பியலில் 96.4%
இந்நிலையில் பாடவாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியாகியுள்ளது. அதன்படி இயற்பியல் பாடத்தில் 96.4% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 95.0% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கணிதத்தில் 96.1%
கணிதப் பாடத்தில் 96.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உயிரியியல் பாடத்தில் 96.34% பேர் பாஸாகியுள்ளனர். விலங்கியல் பாடத்தில் 91.9% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

கணக்குபதிவியலில் 91%
தாவரவியல் பாடத்தில் 93.9% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வணிகவியலில் 90.30% பேரும், கணக்குபதிவியலில் 91% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 96.1% தேர்ச்சியடைந்துள்ளனர்.

231 பேர் 1180க்கு மேல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 231 பேர் 1180க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 1180 மதிப்பெண்களுக்கு மேல் மாணவர்கள் 50 பேரும், மாணவிகள் 181 பேரும் பெற்றுள்ளனர்.

1151 முதல் 1180 மதிப்பெண்
4,847 மாணவ, மாணவிகள் 1151 முதல் 1180 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 8,510 மாணவ, மாணவிகள் 1126 முதல் 1150 மதிபெண்கள் பெற்றுள்ளனர்.

901-1000 மதிப்பெண்
71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்.

700 மதிப்பெண்களுக்கு கீழ்
1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். 700 மதிப்பெண்களுக்கு கீழ் 8,60,434 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications