பிளஸ்–2 தேர்வு மார்ச் 3; எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 26–ந் தேதி தொடக்கம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 3- ந்தேதியும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 26-ந் தேதியும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 50 மையங்களில் எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 3 ஆயிரத்து 50 தேர்வு மையங்களில் 11 லட்சத்து 10 ஆயிரம் மாணவ-மாணவிகளும் எழுதுகிறார்கள்.

இந்த இரு தேர்வுகளிலும் சேர்த்து 19 லட்சத்து 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வமான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் மாதம் 3-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி வரை நடைபெறுகிறது. எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி வரை நடைபெறும்.
பிளஸ்-2 தேர்வுக்கான கால அட்டவணை:
மார்ச் 3-ந்தேதி தமிழ் முதல்தாள்
5-ந்தேதி-தமிழ் இரண்டாம் தாள்
6-ந்தேதி-ஆங்கிலம் முதல் தாள்
7-ந்தேதி-ஆங்கிலம் இரண்டாம் தாள்
10-ந்தேதி-இயற்பியல், பொருளாதாரம்.
13-ந்தேதி-வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.
14-ந்தேதி-கணிதம், விலங்கியல், நுண்உயிரியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ்.
17-ந்தேதி-வேதியியல், கணக்கு பதிவியல்.
20-ந்தேதி-உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்.
24-ந்தேதி-அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.
25-ந்தேதி- கம்யூனிகேட்டிவ் இங்கிலிஸ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான கால அட்டவணை விவரம் வருமாறு:-
மார்ச் 26-ந்தேதி-தமிழ் முதல் தாள்.
27-ந்தேதி-தமிழ் இரண்டாம் தாள்.
ஏப்ரல் 1-ந்தேதி-ஆங்கிலம் முதல் தாள்.
2-ந்தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்.
4-ந்தேதி-கணிதம்.
7-ந்தேதி-அறிவியல்.
9-ந்தேதி-சமூக அறிவியல்.
தேர்வு தொடங்கும் நேரம்
பிளஸ்-2 தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, பகல் 1.15 மணிக்கு முடிவடையும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு முடிவடையும்.
வழக்கமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால் இந்த வருடம் 9.15 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications