எப்படி இருக்கிறான் சுஜித்.. மீட்பு நடவடிக்கைகள் எப்படி போகின்றன.. முதல்வரிடம் விசாரித்தார் மோடி

சுஜித் மீண்டு வர பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 years old child sujith rescue: pon radhakrishnan praises the authorities and rescue team

    சென்னை: சுஜித் எப்படி இருக்கிறான், மீட்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன என்று தமிழக முதல்வரை பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார். குழந்தையை மீட்க தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு கடுமையாக போராடி வருகிறது.

    தமிழகத்தையும் தாண்டி, இந்திய அளவில் சுர்ஜித்தின் விவகாரம் உருவெடுத்து உள்ளது. நாடு முழுவதும் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையாக இருந்து வருகிறது மேலும் சுஜித்தை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசு முழு வீச்சில் இறங்கி உள்ளது.

    பிரதமர்

    பிரதமர்

    4வது நாளாக, 71 மணி நேர மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுஜித் மீட்பு விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலையிட்டு உள்ளார். இது சம்பந்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு, சுஜித்தின் நிலைமை, மற்றும் ஆழ்துளை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    பிரார்த்தனை

    இதையடுத்து இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், "குழந்தை சுஜித்துக்காக என்னுடைய பிரார்த்தனை இருக்கும். குழந்தையை மீட்கும் பணி குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தேன். குழந்தையை பாதுகாப்பாக மீட்டெடுக்க அனைத்து வகையான முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

    தமிழிலும் ட்வீட்

    தமிழிலும் ட்வீட்

    இதைதவிர, பிரதமர் மோடி தமிழிலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "துணிச்சலும் வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன். சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் @EPSTamilNadu உடன் விரிவாகப் பேசினேன். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

    நம்பிக்கை

    நம்பிக்கை

    முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சுஜித்தை பற்றி பிரதமர் கேட்டறிந்ததும், அதன்பிறகு சுஜித்துக்காக பதிவிட்ட இந்த பதிவும் தமிழக மக்களை குறிப்பாக நடுக்காட்டுப்பட்டி மக்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+