அன்புமணிக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை.. நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தகவல்
சென்னை : பாமக இளைஞரணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணிக்கு சென்னையில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அன்புமணி நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

''அன்புமணி பாமக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகருக்கு சென்றிருந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இன்று (20-08-2015) காலை சில அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருந்தார். இந்த நிலையில் நேற்றிரவு அன்புமணிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில் அவருக்கு குடல்வால் அழற்சி இருப்பது தெரியவந்தது.
மருத்துவர்களின் அறிவுரைப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட அன்புமணிக்கு மாலை 5.00 மணியளவில் மருத்துவர் சுரேந்திரன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் குடல்வால் அறுவை சிகிச்சை செய்தனர்.
சிகிச்சைக்கு பிறகு அவர் நலமாக உள்ளார். சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இவ்வாறு பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications