அதிமுக- திமுகவுக்கு எதிராக கூட்டணி- பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதிபட ராமதாஸ் முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்திருக்கிறது.
அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி நேரில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதிமுக- திமுகவுக்கு கண்டனம்
இன்றைய பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித்தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத் தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும். இதை செய்யத் தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பா.ம.க. கட்சியின் தலைமை பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்வெட்டை சரிசெய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications