சமூகநீதி போராட்டத்தை கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும்.. கோவையில் பாமக ஆர்ப்பாட்டம்
கோவையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

கோவை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசின் சமூக நீதி போராட்டத்தை கொச்சைப்படுத்திய தமிழிசையை கண்டித்து அக்கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும் தலைவருமான ராமதாஸின், சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு போராட்டங்களை கொச்சைப்படுத்தியும், அன்புமணி ராமதாசை கொச்சைப்படுத்தியும் கருத்துக்களை பதிவிட்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பாமக மற்றும் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கண்டன ஆர்பாட்டம் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பாமக மாநில துணைதலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜனை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் ராமதாசின் போராட்டங்களை கொச்சைப்படுத்திய தமிழிசை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டங்கள் தீவிரமாகும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
இப்போராட்டதின்போது காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த காவல்துறையினர் மறுத்ததையடுத்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பீனும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதி மறுத்ததால் ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் அறவழியில் போராட்டம் நடத்தினர்.
மாநில துணை பொதுசெயலாளர்கள் ரகுபதி, எஸ்.பி விசாலாட்சி, அல்போன்சா பாலு, மாவட்ட செயலாளர்கள் கொங்கு கிஷோர், கணேஷ், வெங்கடேஷ் காந்தி, சம்பத், அஷோக்ராஜ் ப்ரதீப்குமார் கோவை மாவட்ட தலைவர் குமார், உள்ளிட்டோர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications