கிங் மேக்கராக உருவெடுக்கிறதா பாமக? வலைவீசும் திமுக!
தமிழக அரசியலில் பாமக கிங்மேக்கராக உருவெடுக்கிறது.
Recommended Video

சென்னை: தமிழக அரசியல் களத்தில் தற்போதைய நிலையில் பாமக கிங் மேக்கராக விஸ்வரூபமெடுத்து வருகிறது.
பாமகவை பொறுத்தவரை எந்த அணியிலும் இணையாமல் தனி செயல் திட்டத்துடன் இயங்கி வருகிறது. கடந்த காலங்களில் சொந்த வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவை சரி செய்வதிலும் அக்கட்சி தீவிரம் காட்டுகிறது.
தற்போதைய சூழலில் பாமகவின் பக்கம் அரசியல் கட்சிகள் பார்வை திரும்பியுள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை வடமாவட்ட பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசினார்.

வட தமிழகத்தை நோக்கும் ரஜினி
இச்சந்திப்பின் போது தம் மீதான பாமகவின் கோபம் குறித்து விரிவாக கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியை பற்றியெல்லாம் பாமக இப்போது கவலையேபடுவதில்லை என சொல்லப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் பாணியில் வட தமிழகத்தை ரஜினி குறிவைப்பதைத்தான் இச்சந்திப்பு வெளிப்படுத்தியிருந்தது.

வலைவீசிய பாஜக
அதேபோல் பாஜகவும் பாமகவை குறிவைத்து வலைவீசி கொண்டிருக்கிறது. இந்த வலையில் பெரிய தலைகள் எதுவும் சிக்கவில்லை. இருந்தபோதும் சிக்கிய தலைகளை வைத்துக் கொண்டு வடதமிழகத்தில் பிரமாண்ட கூட்டங்கள், மாநாடு நடத்துவதில் பாஜக மும்முரம் காட்டுகிறது.

திமுக அணியில் பாமக?
தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற நினைக்கிறது திமுக. இந்த கட்சிகளுக்கு பதில் பாமகவை உள்ளே கொண்டு வருவதில் வடமாவட்ட திமுக தலைவர்கள் படுமும்முரமாக இருக்கின்றனராம். வடதமிழகம்தான் கடந்த தேர்தல்களில் திமுகவுக்கு கை கொடுத்தது. ஆகையால் பாமகவுடன் கை கோர்த்தால் காங்கிரஸ்- விடுதலை சிறுத்தைகள் வெற்றிடத்தை நிரப்புவது மட்டுமல்ல... கூடுதல் இடங்களும் கிடைக்கும் என கூறிவருகின்றனராம் வடதமிழக திமுக பிரமுகர்கள்.

மீண்டும் கிங் மேக்கர்?
இப்படி பிரதான கட்சிகள், புதிய கட்சிகள் அனைத்தும் பாமகவை நோக்கி நகருகின்றன. எனவே கடந்த காலங்களைப் போல, மீண்டும் வரும் தேர்தல் காலங்களில் பாமக கிங் மேக்கராக உருவெடுக்கிறது என்பதையே இவை அனைத்தும் வெளிப்படுத்துகின்றன.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications