2016 தேர்தல் - அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாமக முடிவு!
விழுப்புரம்: 2016 சட்டசபைத் தேர்தலில் பாமக முதல்வர் வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸை அறிவிக்க பாமக தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பன முடிவை, அக்கட்சியினர், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள டாக்டர் ராமதாஸின் வீட்டில் கூடி ஆலோசித்து எடுத்துள்ளனர்.
பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று தைலாலபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்தார்.

2 அமர்வுகளாக கூட்டம்
கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. காலை 10 மணிக்குத் தொடங்கிய முதல் அமர்வில், தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில துணைத் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றனர்.

2வது அமர்வில் மா.செக்கள் ஆலோசனை
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அமர்வில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. கூட்டங்களில் கட்சியின் வளர்ச்சி, உறுப்பினர்கள் சேர்க்கை உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அன்புமணி.. சம்மதா...!
கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை 2016ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கலாமா என்று நிர்வாகிகளிடம் கேட்கப்பட்டது. அதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

சீக்கிரமாக சேருங்கள்
இக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், நம்முடைய கட்சியின் கொள்கையான மது ஒழிப்பு, இலவச கல்வி உள்ளிட்ட கொள்கைகளை மக்களிடம் கூறி அனைவரும் உறுப்பினர் சேர்க்கையை விரிவுப்படுத்த வேண்டும். 2 மாதத்திற்குள் உறுப்பினர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.

நாமதான் அடுத்து ஆட்சியைப் பிடிப்போம்
வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் நம் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி. இதற்காக உங்களுடைய சம்மதத்துடன் நம் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க உள்ளோம்.

பொதுக் குழு சம்மதம் பெற்று
இம்மாத இறுதியில் நம் கட்சியின் பொது குழு கூட்டம் கூட்டப்பட உள்ளது. அதில் கட்சியின் அனைத்து நிர்வாகிகளின் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்படுவார் என்று ராமதாஸ் பேசியதாக கூறுகிறார்கள்.

அப்ப பாஜக கூட்டணி இல்லையா...
தனியாக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதால் வரும் சட்டசபைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறாது என்று தெரிகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தர்மபுரி தவிர வேறு எந்த இடத்திலும் வெல்ல முடியாமல் தோல்வியைச் சந்தித்தது பாமக என்பது நினைவிருக்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications