பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லீம் வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: பாமகவின் வரலாற்றிலேயே முதல் முறையாக முஸ்லீம் வேட்பாளர்களை அது அறிவித்துள்ளது. இன்று வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 முஸ்லீம் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாமகவில் இதுவரை முஸ்லீம் வேட்பாளர்களுக்கு இடம் தரப்பட்டதில்லை. இதற்கான காரணத்தை அது வெளியிட்டதும் இல்லை. இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை இன்று பாமக வெளியிட்டது. அதில் 2 முஸ்லீம் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கசாலி, திருப்பூர் தெற்கு தொகுதியில் தி.சை. மன்சூர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இவர்கள் பாமகவின் முதல் முஸ்லீம் வேட்பாளர்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளனர்.
மதுரையில் 2
அதேபோல பாமகவின் சாயல் கூட இல்லாத மதுரையிலும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக. மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளில் பாமக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
மேலும் அருப்புக்கோட்டையிலும் கூட அக்கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள 45 வேட்பாளர்களில் 10 தனித் தொகுதிகள் ஆகும். இதுவும் இன்னொரு ஆச்சரியம். இன்று அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் 80 சதவீத தொகுதிகள் பாமகவுக்கு சம்பந்தம் இல்லாத தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications