Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெங்கு கொசுக்களைக்கூட ஒழிக்காத பழனிசாமிக்கு, இஸட் பிளஸ் பாதுகாப்பா? ராமதாஸ் பொளேர்!

முதல்வர் பழனிச்சாமிக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு கோரி உளவுப்பிரிவு பரிந்துரைக்க உள்ளது நல்ல நகைச்சுவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : முதல்வர் பழனிச்சாமிக்கு இஸட் பிளஸ் காவல் தேவை என்று கூறுவது நல்ல நகைச்சுவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவருக்கு இஸட் பிளஸ் எனப்படும் கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு பரிந்துரைக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: எடப்பாடிக்கு இஸட் பிளஸ் காவல் தேவை என்பது நல்ல நகைச்சுவை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது சசிகலாவின் ஆதரவுடன் விலைகொடுத்து வாங்குவதற்கு முதல்வர் பதவி அல்ல. இந்தியாவில் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் ராஜீவ் குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும் சிறப்புப் பாதுகாப்புப் படை(SPG). காவலுக்கு அடுத்தபடியாக தேசிய பாதுகாப்புப் படையினரைக் (NSG) கொண்டு வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாம் நிலைப் பாதுகாப்பாகும்.

 17 பேருக்கு மட்டுமே

17 பேருக்கு மட்டுமே

இன்றைய நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 17 பேருக்கு மட்டுமே இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவர்களின் உயிருக்கான அச்சுறுத்தல் அளவிட முடியாது. ஆனாலும்கூட, இவர்களில் பலருக்கு வழங்கப்படும் இஸட் பிளஸ் பாதுகாப்பைத் திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசுக்கு பல தரப்பிலிருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 என்ன அச்சுறுத்தல்?

என்ன அச்சுறுத்தல்?

இந்தியாவில் இஸட் பிளஸ் பாதுகாப்பு பெற்றுவரும் தலைவர்களுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலுடன் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை ஒப்பிடவே முடியாது. இன்னும் கேட்டால், எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. தேசப்பாதுகாப்பு, மாநிலப் பாதுகாப்பு சார்ந்த ஏதேனும் அதிரடியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

 நக்சலைட்டு ஒழிப்பால்

நக்சலைட்டு ஒழிப்பால்

உதாரணமாக, ஆந்திரத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க சந்திரபாபு நாயுடு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், அவரை திருப்பதி மலைப்பாதையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி படுகொலைசெய்ய முயற்சி நடந்தது. அத்தாக்குதலில் கடுமையான காயங்களுடன் சந்திரபாபு நாயுடு உயிர் தப்பினார். அதனால் அவருக்கு உயர்நிலை இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

 குழந்தைகளும் சிரிக்கும்

குழந்தைகளும் சிரிக்கும்

விடுதலைப்புலிகளால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இஸட் பிளஸ் பாதுகாப்பு பெற்றார். ஆனால், டெங்கு கொசுக்களைக்கூட ஒழிக்காத பழனிசாமிக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறினால், குழந்தைகள்கூட சிரிக்கும். சசிகலா மற்றும் தினகரன் ஆதரவுடன் தமிழக முதல்வர் பதவியை ஏலத்தில் எடுத்து அமர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி, தம்மை ஓர் ஆண் ஜெயலலிதாவாகவே நினைத்துக்கொண்டு அவரைப் போலவே செயல்பட்டுவருகிறார்.

 அடையாளத்திற்காகவா?

அடையாளத்திற்காகவா?

எங்கு சென்றாலும் வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான காவலர்களை நிறுத்தி, அதன் காரணமாக தமது தகுதி உயர்ந்துவிட்டதாக நினைத்துப் புளங்காகிதம் அடைந்து கொள்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு 22 பேர் கொண்ட இஸட் பிரிவு பாதுகாப்பும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 11 பேர் கொண்ட ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்படுவதால், அவர்களைவிட அதிகமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இணையான இஸட் பிளஸ் பாதுகாப்பு கிடைத்தால் பந்தாவாக இருக்கும் என்ற எண்ணத்தில், இப்படி ஒரு பரிந்துரையைத் தமது கட்டுப்பாட்டில் செயல்படும் உளப்பிரிவின்மூலம் மத்திய அரசுக்கு அனுப்பச் செய்திருக்கிறார். இஸட் பிளஸ் பாதுகாப்பு என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆபத்துக்குத் தேவையானது அல்ல... அடையாளத்துக்குத் தேவையானதாகும்.

 டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி உயர்நீதிமன்றம்

நாட்டின் முக்கியமான தலைவர்களுக்கு இஸட் பிளஸ், இஸட் பிரிவு, ஒய் பிரிவு, எக்ஸ் பிரிவு ஆகிய நான்கு வகையான பாதுகாப்பு வழங்கப்படுகின்றன. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை செலவாகிறது. "அரசியல்வாதிகள் பாதுகாக்கப்படவேண்டிய தேசிய சொத்துக்கள் அல்ல என்பதால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையில்லை. பாதுகாப்புப் பெறும் தலைவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்'' என்று தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதுமட்டுமன்றி, தி.மு.க தலைவர் கருணாநிதி, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுவந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுவிட்டது.

 பழனிசாமிக்குத் தேவையில்லை

பழனிசாமிக்குத் தேவையில்லை

தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது சகோதரர் அழகிரியால் ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று 2014-ம் ஆண்டின் தொடக்கத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதினார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது, எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, எந்த வகையான சிறப்புப் பாதுகாப்பும் தேவையில்லை.

 மக்கள் வரிப்பணம் விண்

மக்கள் வரிப்பணம் விண்

இஸட் பிளஸ் பாதுகாப்பு அணியில் 36 முதல் 55 பேர் வரை இருப்பர். இவர்களில், குறைந்தது 10 பேர் கமாண்டோக்களாக இருப்பார்கள். இத்தகைய பாதுகாப்புப் படைக்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி மக்களின் வரிப்பணம் வீணாகச் செலவாகும். இவ்வளவு செலவுசெய்து பாதுகாப்பு அளிக்கும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த தியாகத்தையும் செய்துவிடவில்லை. அவருக்கு கறுப்புப்பூனைப்படை பாதுகாப்பு வழங்குவது, அப்படைக்குச் செய்யும் அவமரியாதை ஆகும். எனவே, பழனிசாமிக்கு இஸட் பிளஸ் காவல் கோரப்பட்டால், அதை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+