சீட் கிடைக்காததால் விஷம் குடித்த பாமக நிர்வாகி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஈரோடு: சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பாமக நிர்வாகி ஒருவர் விஷம் குடித்துவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியை சேர்ந்தவர் கா.சு. மகேந்திரன். பாமக மாநில துணை தலைவர். பவானி தொகுதியில் போட்டியிட விரும்பி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் பவானி தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதன் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து ராமநாதனை மாற்றி தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு மகேந்திரன் கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பினார். மேலும் தனது ஆதரவாளர்களை திரட்டி
போராட்டங்களும் நடத்தினார். ஆனால் கட்சி தலைமை அவரது கோரிக்கையை ஏற்கவில்லை.
கட்சி தலைமையின் நடவடிக்கையால் அவர் மனமுடைந்தார். கடந்த 5 ஆண்டுகளாக தொகுதி பக்கமே வராதவர் வேட்பாளர். அவர் தைலாபுரம் தோட்டத்தில்
உள்ளவர்களுக்கு நெருக்கமாக இருப்பதால் சீட் அளிப்பதா? என்று கூறி மகேந்திரன் இன்று காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
விஷம் குடித்த அவரை குடும்பத்தினர் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால்
பவானி பாமக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications