2014ல் இழந்த மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் எப்போது பெறும் பாமக?!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இந்த சட்டசபைத் தேர்தலிலும் மோசமான முறையில் "பெர்பார்ம்" செய்துள்ளதால் அக்கட்சி ஏற்கனவே இழந்து விட்ட மாநிலக் கட்சி அங்கீகாரத்தை எப்போது மீண்டும் பெறும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின்போது பாமக தனது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அக்கட்சிக்கு சட்டசபைத் தேர்தலில் 5.23 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதேசமயம் 3 தொகுதிகளில் அது வெற்றி பெற்றது. இதனால் தப்பியது.

அடுத்து 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாமக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதம் 0.4 சதவீதமாக இருந்தது. இதனால் பாமக தனது மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பறி கொடுத்தது.
இப்போதைய தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டையும் பறி கொடுத்தது. மொத்தமாக 5.3 சதவீத வாக்குகளையே அது பெற்றுள்ளது. ஆனால் 6 சதவீத வாக்குகள் இருந்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்பதாலும், குறைந்தபட்சம் 2 எம்.எல்.ஏக்களாவது இருக்க வேண்டும் என்ற விதியை அது பூர்த்தி செய்யாததாலும், அதன் அங்கீகாரம் இப்போதைக்குக் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.
இதனால் பறிபோன மாநிலக் கட்சி அங்கீகாரம் இந்தத் தேர்தல் மூலமாகவும் அதற்குக் கிடைக்கும் வாய்ப்பு பறி போய் விட்டது.
கடந்த 1991 சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை, அடுத்து வந்த 1996 தேர்தலில் 4 சீட்டுகளை அது வென்றது. 2001ல் 20 சீட்டுகளில் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. 2006 தேர்தலில் அது 18 ஆக குறைந்தது. 2011 சட்டசபைத் தேர்தலில் 3 ஆக சுருங்கிப் போனது.
வன்னியர் சங்கமாக ஆரம்பத்தில் செயல்பட்டதை பின்னர் 1989ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் டாக்டர் ராமதாஸ். கட்சிக்கு ஜி.கே.மணியை தலைவராக்கிய அவர் வன்னியர் சங்கத்தை காடுவெட்டி குருவிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு திமுக, அதிமுக, பாஜக என மாறி மாறி கூட்டணிகளை ஏற்படுத்திப் போட்டியிட்டு வரும் பாமக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த சட்டசபைத் தேர்தலில்தான் தனது பழைய பலத்தை சற்று வெளிக்காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications