பாமக வலியறுத்தி திமுக கொண்டு வந்த திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம்.. ராமதாஸ் அதிரடி
கோவை: பாமக வலியுறுத்தலின் பேரில் திமுக கொண்டு வந்த திட்டம்தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல மாநாடு ஜூலை 12ம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று கோவை வந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் கூறியதாவது:-

ஆதாரப்பூர்வ புகார்...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் மீது நடவடிக்கை எடுக்காததோடு, தேர்தல் நேர்மையாக நடந்தது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்திருக்கிறார்.

ஜெயநாயக வெற்றி...
இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் வெற்றி ஜனநாயக வெற்றியல்ல, ஜெயநாயக வெற்றி. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவை வைத்து 2016 சட்ட மன்ற தேர்தலை நடத்த முடியாது. இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

பின்னோட்டம்...
அதேபோல் இந்த வெற்றி 2016 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உண்மையில் 2016 தேர்தலில் அவருக்கு இது பின்னோட்டமாகத்தான் இருக்கும்.

மீண்டும் பதவியிழப்பார்...
சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல்வர் பதவி இழக்கப்போகிறார்.

தொழில் பாதிப்பு...
கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் தொழில் முனைவோரை கவர்ந்து, அவர்கள் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் தொழில் கூடங்கள் மூடப்பட்டதன் காரணமாகவே மின்தேவையானது குறைந்து இருக்கிறது.

பாமக வலியுறுத்தல்...
சென்னை மெட்ரோ ரயில் திட்டம், பா.ம.க. வலியுறுத்தலையேற்று தி.மு.க. ஆட்சியில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கோவை, மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தையும், பி.ஆர்.டி. எனப்படும் அதிவேக பேருந்து போக்குவரத்தையும் கொண்டு வர வேண்டும்.

கூடுதல் அவகாசம்...
தமிழகத்தில் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதற்கு கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிக்கலாம்'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications