நெகிழ வைத்த கருணாநிதி -ராமதாஸ் சந்திப்பு... உருவாகுமா திமுக- பாமக கூட்டணி?
திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதுமையாலும் உடல்நலம் பாதிப்பாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ராமதாஸும் அன்புமணியும் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாமகதான் என முழக்கமிட்டு வருகின்றனர்.

மீண்டும் கூட்டணி?
இந்நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ராமதாஸ் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து திமுக- பாமக கூட்டணி உருவாகுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

திமுக தலைமை விருப்பம்
திமுக தலைமையைப் பொறுத்தவரையில் பாமகவையும் கூட்டணியில் சேர்க்கலாம் என்றே நினைக்கிறது. இதற்காகத்தான் கருணாநிதியுடனான ராமதாஸ் சந்திப்புக்கும் ஓகே சொல்லப்பட்டதாம்.

திமுக தலைவர்கள் எதிர்ப்பு
களநிலவரத்தை அறிந்த திமுக மூத்த தலைவர்களோ, பாமகவுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை; அந்த கட்சியுடன் கூட்டணி வைத்த நாமும் வெல்லவில்லை; அதிமுகவும் வெல்லவில்லை; பாமகவின் வாக்குகள் நமக்கு ஒருபோதும் விழுவதும் இல்லை; அதனால் அக்கட்சியுடனான கூட்டணி முடிவை தவிர்த்து விடுங்கள் என மேலிடத்திடம் வலியுறுத்துகின்றனராம்.

திமுக கூட்டணி வேண்டாம்
ஆனால் பாமக தரப்பில் மூத்த தலைவர்கள் சிலர் ராமதாஸிடம், திமுக விரும்புகிற நிலையில் கூட்டணிக்குள் போய்விடலாமே என கூறியிருக்கின்றனர். இதை ராமதாஸ் முற்றாக நிராகரித்து, திமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார். நம்முடைய கொள்கையில் நாம் உறுதியாக இருப்போம்; அப்படி ஒரு கூட்டணியே வேண்டாம் என ராமதாஸ் கறாராக கூறியிருக்கிறாராம்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications