Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்க என்ன அடிமையா? நீங்க கிழிச்சத தான் பாத்தோமே..! எடப்பாடிக்கு கவுண்டர் அட்டாக் கொடுத்த அன்புமணி.!

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: நாம் துரோகம் செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யாருக்கு யார் துரோகம் செய்தது. உங்களுடன் கூட்டணிக்கு வந்து, உங்களுக்கு நாங்கள் அடிமை என எழுதிக்கொடுத்தோமா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ம.க ஸ்டாலினை ஆதரித்து, மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.

Pmk leader Anbumani Ramadoss questioned AIADMK general secretary Edappadi Palaniswami


பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " இங்கே ம.க ஸ்டாலின் வெற்றி பெற்றால், பாரத பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்பார், அது உறுதியானது. அந்த வகையில், இந்த தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல்.

கூட்டணிக்கு காரணம்: இந்த தேர்தல் கூட்டணிக்கு காரணம், 57 ஆண்டுகளாக அதிமுக, திமுக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நாங்கள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம். இவர்கள் ஆண்டது போதும், இவர்களால் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டம் ஏதும் கிடைக்காது, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வழங்க முடியாது, இவர்களின் தலைமையை சிந்தித்து பார்க்க வேண்டும். திமுக, அதிமுக கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா தலைமையில் வேறு. ஆனால், இன்றளவில் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி இந்த இரண்டு தலைவர்களால் தமிழ்நாட்டுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமா?


வெற்றி உறுதி: இன்று நமது பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெறுவது 100% உறுதி. அதில் மாற்றுக் கருத்து இல்லை. பிரதமராக வந்த பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் அவரிடம் சென்று நிற்க முடியுமா? அதிமுக வேட்பாளர் செல்ல முடியுமா? அதிமுக எதற்காக இந்த தேர்தலில் களமிறங்குகிறது என அவர்களுக்கே தெரியவில்லை. நான் அதிமுகவினரை பார்த்து கேட்கிறேன், உங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டும். அதிமுக மாநிலம் மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக இல்லை. இங்கும், மத்தியிலும் அவர்களால் எதையும் கேட்க முடியாது.

Pmk leader Anbumani Ramadoss questioned AIADMK general secretary Edappadi Palaniswami

கோபம் திமுக மீது: அதிமுகவிடம் தேசிய கட்சி கூட்டணி இல்லை, பிரதமர் வேட்பாளர் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகும் தேர்தல் இல்லை. பின் எதற்கு அதிமுகவினர் உங்களின் வாக்குகளை வீணாக்குகிறீர்கள்?. உங்களின் எதிரி திமுக, உங்களின் கோபம் திமுக மீது. திமுக கூட்டணியை தோல்வியடைய செய்ய, மாம்பழத்திற்கு வாக்களியுங்கள், திமுக கூட்டணி உறுதியாக தோற்கடிக்கப்படும். அதிமுக அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

திமுக, அதிமுக : ஏன் இந்த கூட்டணியில் இணைந்தோம்? 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சி செய்து நாசப்படுத்திவிட்டது. இவ்வுளவு ஆண்டுகளாக மாறி -மாறி ஆட்சி செய்து சீரழிகின்றனர். இவர்களுக்கு மேடையில் வசனம் பேசுவது மட்டுமே தெரியும். நாங்கள் மீனவர்களின் பாதுகாவலர்கள் என திமுக, அதிமுக பேசுவார்கள். கச்சத்தீவை கொடுத்த போதே அனைத்தும் முடிந்துவிட்டது. என்ன பாதுக்காத்தீர்கள்? காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தான் அதனை செய்தீர்கள். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் உடன் நீ கைசேர்ந்து இருக்கிறாய். அந்த காங்கிரஸ் வேட்பாளர் தான் இங்கு போட்டியிடுகிறார்.

யாருக்கு யார் துரோகம்: நாம் துரோகம் செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யாருக்கு யார் துரோகம் செய்தது. உங்களுடன் கூட்டணிக்கு வந்து, உங்களுக்கு நாங்கள் அடிமை என எழுதிக்கொடுத்தோமா? 2019 ல் கூட்டணிக்கு வரும் போது 10 கோரிக்கை முன்வைத்தோம். இட ஒதுக்கீடு அரைகுறையாக, அவசரமாக கொடுத்தீர்கள். நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் என்பது தெரிந்தே அதனை கொடுத்துள்ளார். 5 ஆண்டு காலமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பணியாற்றினேன். எனக்கு நிர்வாகம் தெரியும், நீ எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம்.. இந்திய தலைவர்கள், உலக தலைவர்களை எனக்கு தெரியும். உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யும் போது, உன் வாயை வைத்து என்ன செய்து கொண்டிருந்தாய்? உன் கட்சிக்காரர் யாரேனும் பேசினார்களா? மனது வரவில்லை. 2 ஆண்டுகளாக நீங்கள் கிழிப்பதை நான் நேரடியாக பார்த்தேனே." என கடுமையாக விமர்சித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+