2016ல் அதிமுக – திமுக தவிர்த்து பாமக தலைமையில் கூட்டணி: ராமதாஸ் அறிவிப்பு
சென்னை: 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணியாக அந்தக் கூட்டணி இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் இதனை தெரிவித்தார். மேலும் அவர், தமிழகத்தில் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்று 36 நாட்களாகியும், அரசுப் பணிகள் முடங்கியே இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டிய பணிகளில் அவர் கவனம் செலுத்தாவிட்டால், அப்பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த அவர், 2016ல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்றும் அரசியல் நாகரீகம் காரணமாகவே தமது பேத்தியின் திருமணத்திற்கு கட்சித் தலைவர்கள் வந்திருந்ததாவும் விளக்கம் அளித்துள்ளார்.
சுரங்க முறைகேடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், சகாயம் தலைமயில் குழு அமைக்க தமிழக அரசு முன்வரவில்லை எனவும் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரம் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதியும் மதிமுக, பாமக திமுகவுடன் இணைய முன்வந்தால் கட்சி பொதுக் குழுவில் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை காங்கேயத்தில் நடைபெற்ற ஈரோடு கணேசமூர்த்தி இல்ல விழாவில் அவர் பங்கேற்று பேசும்போது, "திமுகவுடன் கூட்டணி என்று ஒருபோதும் கூறியது கிடையாது" என்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், திமுக, அதிமுக கட்சிகள் அல்லாத கூட்டணி பாமக தலைமையில் அமையும் என ஒரே போடாக போட்டுள்ளார் ராமதாஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications