காவிரி: மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் கோரிக்கை நிறைவேறும் வரை 1000 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகிறது.
காவிரி நதியை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரங்கள் ஆகியும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

கருப்பு கொடி கட்டி
நேற்றுடன் நீதிமன்றம் விதித்த கெடுவும் நிறைவடைந்துவிட்டது. இதனால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

இந்த போராட்டம்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாமகவினர் 1000 வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். தமிழகத்தின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

எதிர்ப்பு தெரிவித்து
அதுபோல் சென்னை தி நகரில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வீட்டிலும் கருப்பு கொடி பறக்கிறது. மேலும் வேலூர் அலுமேலுரங்காபுரம் மற்றும் காகிதபட்டறை பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படுகிறது.

சாலை மறியல்
திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி கிராமத்தில் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசைக் கண்டித்து தஞ்சையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

1000 கிராமங்களில் கருப்பு கொடி
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் ,சிங்கபுரம், விலாரி பாளையம், பொன்னாரம்பட்டி, கொட்ட வாடி, தாண்டானூர் உள்பட பல கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட பாமகவினரின் வீடுகளில் கருப்பு கொடியேற்றி கண்டன தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications