பாமக தேர்தல் அறிக்கை ரெடி!
சென்னை: பாமக தனது தேர்தல் அறிக்கையை தயாரித்து முடித்து விட்டதாம். அடுத்து வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருவதாகவும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதல் பட்டியல் வெளியாகும் என்றும் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவின் வாயையே பார்த்து டென்ஷனில் இருந்து வந்த அத்தனைக் கட்சிகளும் இப்போது அத்தனை பதட்டமும் நீங்கி தத்தமது வேலையில் பிசியாகி விட்டன.
தேமுதிகவைத் தவிர மற்ற அத்தனைக் கட்சிகளும் தற்போது படு சுறுசுறுப்பாக விறுவிறுப்பாக வேலைகளை பார்க்க ஆரம்பித்துள்ளன.

பாமக விறுவிறுப்பு
பாமக தனது தேர்தல் வேலைகளை ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செய்து வருகிறது. திமுக பாணியில் அதுவும் கார்ப்பரேட் லெவல் பிரசாரத்தையும், தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் அறிக்கை தயார்
பாமகவின் தேர்தல் அறிக்கை தற்போது தயாராகி விட்டதாம். அதேபோல வேட்பாளர் பட்டியலையும் கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டதாம். முதல் பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகுமாம்.

முதல்வர் வேட்பாளர் அன்புமணி
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் அன்புமணி மறுபக்கம் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் போட்டியிடும் தொகுதியைத் தீவிரமாகப் பரிசீலித்து வைத்துள்ளது பாமக.

மது ஒழிப்பு
பாமகவின் தேர்தல் அறிக்கையில், மது ஒழிப்பு, விவசாயம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மதுவினால் கணவனை இழந்த பெண்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கு ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

234 தொகுதிகளிலும் போட்டியிட திட்டம்
தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளதால் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அது இறுதி செய்துள்ளதாம். வேட்பாளர் பட்டியலை படிப்படியாக அது வெளியிடுமாம்.

புயல் வேகப் பிரசாரம்
தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும் டாக்டர் ராமதாஸ் தனது தீவிரப் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று தெரிகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications