தேமுதிகவுக்கு இணையான 'சீட்' - பாஜக அணியில் பாமகவின் டிமாண்ட்!

தமிழகத்தில் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்தது பாமக. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சாதி கட்சிகளை ஒன்று திரட்டி சமூக ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது. இதன் சார்பில் இதுவரை 10 வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்தது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் பாமக மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்கை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் அறிவிக்கப்படவில்லை.
அத்துடன் பாமக பொதுக்குழுவில் பாஜகவை பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்குமாறும் நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனால் பெரும்பாலான நிர்வாகிகள் பாஜகவை விமர்சிக்கவில்லை. ஆனால் காடுவெட்டி குரு மட்டுமே, மோடி அலைவீசவில்லை என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் கூட்டணி தொடர்பான பாமகவின் இந்த நீண்ட மெளனத்தின் பின்னணியே சீட் பேரம் என்றுதான் கூறப்படுகிறது. அதாவது பாஜக அணியில் தேமுதிக இடம்பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் அதே நேரத்தில் அந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் பாமகவின் நிபந்தனையாம்.
இந்த நிபந்தனையில் உறுதியாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் பாஜகவை சீண்டாமல், கூட்டணி பற்றி எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறதாம் பாமக.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications