விஜயகாந்த்தை "கிங்"காக ஏற்ற பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவிக்க தயங்கும் பாமக
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்ட பாரதிய ஜனதாவுடன் கூட்டணியே கிடையாது என திட்டவட்டமாக அறிவிக்காமல் பாமக ஊசலாட்டத்தில் இருக்கிறது.
சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில்தான் கூட்டணி; அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர்- இதை ஏற்கும் கட்சிகளுடனேயே கூட்டணி என ஓராண்டுகாலமாக கூறி வருகிறது பாமக. ஆனால் பாமக தலைமையில் எந்த ஒரு அரசியல் கட்சியும் இதுவரை போய்ச் சேரவில்லை.

அதே நேரத்தில் பாமகவை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர பாஜக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநாட்டில் தாம் கிங்காக இருக்கவே விரும்புவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். இதனைத் தொடர்ந்து பாஜகவும், விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க தயார் என பகிரங்கமாக அறிவித்தது.
ஆக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி இருக்கிறது. இதற்குப் பின்னராவது, இனி பாஜகவுடன் கூட்டணியே இல்லை என பாமக அறிவித்திருக்க வேண்டும்; ஆனால் அப்படி அறிவிக்க பாமக தயங்கி வருகிறது.
இது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட பேசுவின் நேற்றைய விவாதத்தில் பாமக வழக்கறிஞர் பாலுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவரும் திட்டவட்டமாக எதனையும் சொல்லாமல், எங்கள் தலைமையில்தான் கூட்டணி; அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்பதில் உறுதியாக இருக்கிறோம்; ஆகையால் கூட்டணி தொடர்பான விவாதங்களுக்கு எங்களை அழைக்காமல் இருந்தால் நல்லது என நீட்டி முழக்கினாரே தவிர, ஒரே போடாக "விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளர்னு அறிவித்திருச்சு பாஜக.. ஆக பாஜகவுடன் கூட்டணி இல்லை" என நறுக்கு தெறித்தாற்போல சொல்லவில்லை.
பாமக என்னதான் வெளிப்படையாக, எங்கள் தலைமையில்தான் கூட்டணி; அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என கூறினாலும் பாஜக கூட்டணியில் நீடிக்கவே அது விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துவதாக அதன் 'நழுவல்' நிலைப்பாடு இருக்கிறது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications