வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்ட பாமக திட்டம்: திருமா

இது குறித்து அவர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் வாக்களித்தோம். ஏனென்றால் ஹைதராபாத் நிஜாம் காலத்தில் தெலுங்கானாவை பாகிஸ்தானுடன் இணைக்க அவர் திட்டமிட்டார். அப்போது நேரு, பட்டேல் ஆகியோர் இந்திய துணை ராணுவத்தை அனுப்பி வைத்து நிபந்தனையுடன் இந்திய யூனியனுடன் தெலுங்கானாவை இணைத்தனர்.
விருப்பம் உள்ளவரை இணைந்திருக்கலாம் என்றும், விரும்பாத போது பிரிந்து கொள்ளலாம் என்பது தான் அந்த நிபந்தனை. அதனால் நாங்கள் தெலுங்கானா மசோதாவை வரவேற்றோம். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா மக்கள் பகைமையை மறந்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும்.
சில கட்சிகள் தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி சாதி, மத வெறியை தேர்தல் பிரச்சார உத்தியாக கையாண்டு வருகிறது. தமிழகத்தில் பாமக சாதி வெறியையும், தேசிய அளவில் பாஜக முஸ்லிம் வெறுப்பையும் கையில் எடுத்துள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் வன்னியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே கலவரத்தை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட பாமக திட்டமிட்டுள்ளது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தமிழக அரசு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
திமுக கூட்டணி மிகவும் பலமான கூட்டணி ஆகும். தேமுதிக பாஜக கூட்டணிக்கு செல்லாது என்று நம்புகிறேன். காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு இருப்பினும் தமிழக மற்றும் தேசிய அளவில் சாதி, மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணிக்கு வந்தால் அதை வரவேற்போம் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications