அதிமுக கரைவேட்டியுடன் பிரச்சாரத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர்.. ஆதாரத்துடன் பாயும் ராமதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக சேலம் மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன் பிரச்சாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதிமுக கரை வேட்டியுடன் பிரசாரம் செய்து வரும் கணேசன் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வதற்காக அனைத்து நடத்தை விதிகளும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்ற அளவுக்கு விதிமுறைகள் மீறப்படுகின்றன.

விடிய விடிய வேலை

விடிய விடிய வேலை

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்பதால் அந்தத் தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டன. கழிவு நீர் குழாய்களும், குடிநீர் குழாய்களும் இரவோடு இரவாக மாற்றப்பட்டு புதிய குழாய்கள் புதைக்கப்பட்டன. சாலை அமைக்கும் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டதுடன், அப்பணியை சென்னை மாநகர காவல்துறை ஆணையரே நேரில் மேற்பார்வையிட்ட அவலமும் நடந்தது. பொதுமக்களின் நலனுக்காக இந்த பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், 4 ஆண்டுகளாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு அனைத்துப் பணிகளையும் இரவோடு இரவாக செய்து முடிப்பது ஏன்? என்பது தான் மக்கள் எழுப்பும் கேள்வி ஆகும்.

கட்சி கரைவேட்டியுடன் பிரச்சாரம்

கட்சி கரைவேட்டியுடன் பிரச்சாரம்

கடந்த 4 ஆண்டுகளாக அரசு செயல்படவில்லை என்பதற்கு ஆட்சியாளர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலமாகவே இதை பொதுமக்கள் பார்க்கிறார்கள். தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க இதுவரை வராத நிலையில், அவருக்காக 28 அமைச்சர்களும், 48 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 150 சட்டமன்ற உறுப்பினர்களும் மக்கள் பணியை மறந்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க.வினர் என்ற முறையில் இவர்கள் கட்சிப்பணியாற்றுவதை விமர்சிக்க முடியாது. ஆனால், அரசிடம் ஊதியம் வாங்கும் காவல்துறை அதிகாரிகள் பலரும் அ.தி.மு.க. கரை வேட்டி ஜெயலலிதாவுக்காக பரப்புரை செய்கின்றனர்.

காவல்துறை அதிகாரி

காவல்துறை அதிகாரி

சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன் என்பவர் காலில் அடிபட்டதாகக் கூறி கடந்த 10 நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றிருக்கிறார். வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ள உதவி ஆணையாளர் கணேசன், தற்போது இராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்து வருகிறார். அரசு ஊழியரான இவர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி, ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அ.தி.மு.க. நிர்வாகியாகவே மாறி பரப்புரை செய்கிறார்.

நடத்தை விதிமீறல்

நடத்தை விதிமீறல்

தேர்தல் நடத்தை விதிகளின்படி இது தவறு ஆகும். அதுமட்டுமின்றி 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு காவல்துறை சார்பு அதிகாரிகள் விதி எண் 18, 1973 ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி எண் 14 ஆகியவற்றின்படி காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் அரசியல் பணியில் ஈடுபடுவது குற்றம் ஆகும். இவற்றின் அடிப்படையில், அ.தி.மு.க.வுக்காக தேர்தல் பணியாற்றி வரும் காவல்துறை உதவியாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்வதுடன், துறை ரீதியிலான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் ஆணையிட வேண்டும்.

நடவடிக்கை என்ன?

நடவடிக்கை என்ன?

அதுமட்டுமின்றி, தன்னை அ.தி.மு.க. நிர்வாகியாக வெளிக்காட்டிக் கொள்ளும் கணேசன் கடந்த காலங்களில் நடுநிலையான அதிகாரியாக பணியாற்றியிருக்க வாய்ப்பில்லை; இனி வரும் காலங்களிலும் அவ்வாறு செயல்பட வாய்ப்பில்லை. எனவே, கடந்த காலங்களில் இவரது செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+