சட்டசபை தேர்தலுக்கே இல்லை, உள்ளாட்சி தேர்தலுக்கா கூட்டணி?, நெவர்: அன்புமணி
சென்னை: சட்டசபை தேர்தலை போன்றே உள்ளாட்சி தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்கப் போவது இல்லை என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பாமக அதன் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. மேலும் பாமக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது.
மாற்றம், மாற்றம் என்று முழங்கிய பாமக ஆட்சியை பிடிப்பதில் நம்பிக்கையுடன் இருந்தது.

தோல்வி தான்
சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வர் ஆவார் என்ற பாமகவின் எதிர்பார்ப்பு வீணாகிப் போனது. ஆளும்கட்சியான அதிமுகவே ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

உள்ளாட்சி தேர்தல்
சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக செயல்பட்டு வருகிறது.

பாமக
சட்டசபை தேர்தலிலேயே யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலிலா கூட்டணி வைப்போம். இல்லை, தனியாகத் தான் போட்டியிடப் போகிறோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
சட்டசபை தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியது. அதுவே நேர்மையாக நடக்கவில்லை. இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி தேர்தல் எந்த அளவுக்கு நியாயமாக நடக்கும் என்பது தெரியவில்லை என்கிறார் அன்புமணி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications