மர்ம மரணமடைந்த எடப்பாடி கனகராஜ் போயஸ் கார்டனில் சசிகலாவின் டிரைவர்- பரபர தகவல்கள்
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி கொலையில் தேடப்பட்டு வந்த கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த கனகராஜ் போயஸ் தோட்டம் பங்களாவில் சசிகலாவுக்குத்தான் கார் ஓட்டினார்
சேலம்: ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களா காவலாளி ஓம்பகதூர் கொலையில் தேடப்பட்ட கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளார். இவர் சசிகலாவுக்கு ஓட்டுநராக இருந்தவர் என்கின்றன புதிய தகவல்கள்.
சேலம்-ஆத்தூர் ஹைவே ரோட்டில் தென்னங்குடிபாளையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கனகராஜ் கார் மோதிய நிலையில் பலியானார். முன்னதாக இவர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று கூறப்பட்டது.

ஆனால் கனகராஜ் 5 ஆண்டுகளுக்கு முன்பு போயஸ் கார்டன் மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் கார் டிரைவர், உதவியாளர் பணியில் இருந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டவில்லை என்றும் சசிகலாவுக்குத்தான் சில முறை ஓட்டியுள்ளார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கனகராஜ் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவர். சேலம் முன்னாள் அதிமுக பிரமுகர் சரவணன் என்பவரால் போயஸ் கார்டனுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.
கனகராஜ் மரணம் போயஸ் கார்டனில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனகராஜ் நிலைமை தங்களுக்கும் வந்துவிடுமோ என்று ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகளாக இருந்தவர்கள், போயஸ் இல்லத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்கள் என்று பலரும் பீதியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications