காஞ்சியை கலக்கிய டான் ஸ்ரீதர் தற்கொலைக்கு காரணம் என்ன?
சென்னை: ரியல் எஸ்டேட் தாதாவான தனபாலன் ஸ்ரீதர், தமிழகத்தின் தாவூத் என அழைக்கப்பட்டவர். இவர் மீது 7 கொலை, 14 கொலை முயற்சி, ஆட்கடத்தல் உள்பட 43 வழக்குகள் இருக்கிறது.
போலீசார் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டதை அறிந்த ஸ்ரீதர், 2013ல் துபாய்க்கு தப்பியோடினார். ஆனால், இன்டர்போல் மூலம் இவருக்கு குடைச்சலை கொடுத்தது காவல்துறை. இன்டர்போல் இவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இதனால், கடந்த ஆண்டு இவர் மலேசியா தப்பிச் சென்றதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. ஸ்ரீதருக்கு தமிழகத்தில் ரூ.150 கோடி மதிப்புக்கு சொத்து உள்ளது. இவரை தமிழகம் வரவைக்க அமலாக்கத்துறை மூலம், சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்தனர் போலீசார்.

சொத்துக்களை மனைவி பெயரில் குவித்தார்
சாராய வியாபாரி, சக்கவர்த்தியிடம் அடியாளாக சேர்ந்து பின்னர் அவரது மகளையே திருமணம் செய்து கொண்டு தனிப் பெரும் கள்ளச்சாராய வியாபாரியாக உருவெடுத்தவர் ஸ்ரீதர். எனவே, ஸ்ரீதரின் மனைவி குமாரியின் பெயரில்தான் அதிகப்படியான சொத்துக்களை வாங்கி குவித்திருந்தார். சுமார் 80 சதவீத சொத்துக்கள் மனைவி பெயரில்தான் உள்ளனவாம்.

அமலாக்கத்துறை பிடியில் மனைவி
இந்த நிலையில், குமாரியை சென்னையில் வைத்து கடந்த ஆண்டு நவம்பரில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதேபோல ஸ்ரீதர் மகனும் காவல்துறை விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.

ஸ்ரீதருக்கு இரட்டை அடி
தமிழகத்தில் தனது குடும்பத்திற்கு காவல்துறை நெருக்கடி கொடுத்துவந்த நிலையில், சர்வதேச அளவில் இன்டர்போல் தனக்கு நெருக்கடி கொடுப்பதால் நெருக்கடிக்குள்ளான ஸ்ரீதர், சரணடையத் தயார் என மீடியாக்கள் மூலம் தூதுவிட்டார்.

ஸ்ரீதர் தற்கொலைக்கு காரணம்?
ஆனால் காவல்துறை தன்னை என்கவுண்டர் செய்யத்தான் ரெடியாக உள்ளது என்று சந்தேகித்த ஸ்ரீதர், இந்தியா வராமல் பதுங்கியிருந்தார். இந்த நிலையில், நெருக்கடிகளால் மனமுடைந்த ஸ்ரீதர், கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications