குளிக்க வந்த இடத்தில் குடித்து விழுந்து புரளும் அவலம்... குற்றாலத்தில் 50 குடிகாரர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து செல்லும் குற்றாலத்தில் பொது இடத்தில் உட்கார்ந்து குடித்தாக 50 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் வந்து செல்லும் ஒரே சுற்றுலாத்தலம் அருவிகள் நிறைந்த நகரமான குற்றாலம் மட்டுமே.

இங்கு ஆண்டுத்தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலம் ஆகும். அதுபோக 3 மாதம் சபரிமலை சீசன் காலம் ஆகும். இந்த நாட்கள் போக மொத்தமாய் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 70 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

உயர்நீதிமன்றம் போட்ட நிபந்தனைகள்

உயர்நீதிமன்றம் போட்ட நிபந்தனைகள்

சுற்றுலாப் பயணிகள் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக நீதிமன்றம் 31 நிபந்தனைகளை விதித்தது.

தண்ணி அடிக்காதே

தண்ணி அடிக்காதே

அதில் மது அருந்தக் கூாது என்பதும் ஓன்று. அருவிக்கரையிலிருந்து ஒருகிலோ மீட்டர் தூரம் வரை மதுக் கடைகள் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியது.

விடிய விடிய

விடிய விடிய "சரக்கு" வியாபாரம்

ஆனால் அதையும் மீறி சரக்கு வியாபாரம் விடிய..விடிய புரோக்கர்கள் மூலம் கொடிகட்டி பறப்பது ஒருபுறம். மெயின் ரோட்டில் ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஒரு மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணமும் போச்சு

பணமும் போச்சு

இங்குள்ள பார்களில் ஒரு கிளாஸ் 5ரூபாய், தண்ணீர் பாக்கெட் 5 ரூபாய் ,ஊறுகாய் 2ரூபாய் என கொள்ளை லாபம் அடிப்பதால் பார்களில் குடிக்காமல் இக்கடையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மதுப் பாட்டில்களை வாங்கி அருகிலுள்ள சாலையரப் பகுதிகளிலும், தனியார் தோட்டங்களிலும், சாலைகளிலும், வாகனங்களிலும் நின்று குடித்து அட்டகாசம் செய்கிறார்கள்.

அரை குறையாக சாலையில் விழுந்து கிடக்கும் அவலம்

அரை குறையாக சாலையில் விழுந்து கிடக்கும் அவலம்

அது மட்டுமல்லாமல், குடிகாரர்கள் ஆங்காங்கே சாலையில் அரைகுறை ஆடையோடு விழுந்து கிடப்பதால் பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் அவலமும் இங்கு அதிகரித்துள்ளது.

போலீஸ் வேட்டை

போலீஸ் வேட்டை

இதையடுத்து குற்றாலத்தில் தற்போது போலீசார் அதிரடி சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சோதனையில் மதுரை, சென்னை, திருச்சி, காரைக்குடி, ஈரோடு, சேலம் என பல்வேறு பகுதிகளை சார்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கேவலம் தேவையா.. சிந்தியுங்கள் மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+