முதலாளி வீட்டிலேயே கைவரிசை காட்டிய வேலைக்கார தம்பதி - 90 பவுன் திருட்டு
திருப்பூர்: திருப்பூரில் முதலாளி வீட்டில் இருந்து 90 பவுன் நகைகளை கொள்ளையடித்த தொழிலாளி தம்பதியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகரில் ரயில் நிலையம் அருகே உள்ள கௌஸ் காலனியைச் சேர்ந்தவர் லாசர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த இருபது ஆண்டுகளாக உடுமலையில் சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி லாசர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது லாசர் வீட்டின் கதவை உடைத்து அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 90 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர்.
இதுதொடர்பாக உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், லாசரின் மளிகைக் கடையில் வேலை செய்து வரும் சையது இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி சம்சாத் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள், லாசர் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, தம்பதியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், "சையது இப்ராஹிமின் செல்லிடப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் அவரும், அவரது மனைவி சம்சாத்தும் இந்தக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள நகையை மீட்கும் நடைவடிக்கை நடைபெற்று வருகிறது" என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications